இது நியு யார்க் டைம்ஸின் சமீபத்திய கட்டுரை:
Teaching Boys and Girls Separately – Single-Sex Public Education – Children and Youth – Schools – Gender – New York Times: “Why Gender Matters: What Parents and Teachers Need to Know About the Emerging Science of Sex Differences.”
நண்பரின் விரிவான பதிலில் சில பகுதிகள்:
மார்கரெட் அட்வுட் என்பாருடைய அரை-பெண்ணிய நாவல் ஒன்று 90களில் வந்தது என நினைவு. ‘The handmaid’s tale’ என்று தலைப்பு என நினைக்கிறேன். நல்ல நாவல். இதை ஒரு சுமார் படமாகக் கூட எடுத்தார்கள். (The Handmaid’s Tale (1990))
இந்த நாவலில் இப்படி ஒரு ஆண்- பெண் பிரித்து வாழ்ந்த சமுகம் கற்பனை செய்யப்படுகிறது. இதில் பெண்கள் கடும் அடக்குமுறைக்குட்படுத்தப்பட்டு, உடல்கூறு வழியே பகுக்கப்படுகிறார்கள். இது முற்றிலும் பெண் வெறுப்பை மையம் கொண்ட கதை இல்லை, ஆனால் பெண்ணடிமைத்தனத்தைக் கொண்டது. கிட்டத்தட்ட மத்தியகால யூரோப்பின் பெண்கள் நிலை, இன்றைய அரபிய இஸ்லாமிச சமுதாயப் பெண்களின் நிலை, தாலிபானிய, பின்லாடனிய இஸ்லாமியச் சமுகம் இங்கு கதையில் வரும் உலகம் போன்றது.
இன்னொரு விருப்பமான எழுத்தாளர்- உர்சுலா லெ க்வின் (Ursula le Guin) இவரும் இப்படி ஆண் பெண்கள் கடுமையாகப் பிரிக்கப்பட்ட ஒரு சமுகத்தை வைத்து அருமையான நாவல் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த நாவலில் பெண்ணியப் பிரச்சார நெடி குறைவு, உளவியல் நுட்பங்கள் அதிகம்.





![[8] [8]](http://static.flickr.com/3566/3684030710_a3b5755453_t.jpg)
4 பதில்கள் இது வரை ↓
mohana // மார்ச் 29, 2008 இல் 3:16 மு.பகல் |
நண்பர் யார்னு சொல்லலாம்ல. நாங்களும் நண்பரை தனிப்பதிவு வச்சுக்கச்சொல்லிக் கேப்பம்ல. குறைந்தது விருந்தினர் பதிவாவது எழுதச் சொல்லிக் கேப்பம்ல.
iamnotgod // மார்ச் 31, 2008 இல் 4:35 மு.பகல் |
நண்பர் பாபாதானே, நமக்கு நாமே திட்டம் மாதிரி
bsubra // மார்ச் 31, 2008 இல் 9:24 மு.பகல் |
iamnotgod…
இந்த மாதிரியெல்லாம் லோகாதய அனுபவம் இருந்தா, நான் ஏன் குண்டுச்சட்டியில் குதிர ஓட்டிண்டு இருக்கப்போறேன்
bsubra // மார்ச் 31, 2008 இல் 9:25 மு.பகல் |
மோகனா… நல்ல திட்டம்தான்