Snap Judgment

தமிழ்ப்பதிவுகள் – குறிப்பிடத்தக்க முகமூடிகள்

மார்ச் 26, 2008 · 15 மறுமொழிகள்

அல்செய்மர் ஆள்வதற்கு முன் நினைவில் நின்ற முகமூடிப் பதிவர் பட்டியல்:

1. முகமூடி, அனானி, பெயரிலி என்றவுடன் நினைவுக்கு வருபவர். யாஹு குழுமங்களில் உலாவிய டிஸ்கி பாவிக்கவும். நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்காமல் சுதந்திரமாக விமர்சித்தவர். இன்றும் ஏங்குவது: பதிவுக்கு பல்விதமாக செய்தி, வலைப்பூ, சிரிப்பான், இலக்கிய விமர்சனம், அமெரிக்க ஊடகம் தொட்டுக்காட்டியவர்.

2. சன்னாசி: ஆரம்பித்த புதிதில் இவரும் முந்தையவரைப் போலவே சாட்டையடி சுழற்சி சொல்லாட்சி கொண்டு சினிமா குறித்தும் கலை குறித்தும் வெளிப்படுத்திய வேகத்தில் ‘அவர்தான் இவரோ’ என்று எண்ணியது உண்டு. இன்றும் ஏங்குவது: ‘இது தேறாத கேசு’ என்று தட்டிக் கழிக்காமல் வாதம் பொறுமையாக வாதம் செய்யும் லாவகம்.

3. முகமூடி: பேசாப்பொருளை விவாத களத்தில் வைத்தவர். சுற்றி வளைத்துப் பேசுவதில் ஏற்கனவே சொல்லப்பட்டவர்களுக்கு சளைக்காதவர். இவரின் பதில் வாதங்கள் வாயடைத்துப் போக வைப்பவை.

4. குசும்பன்: புதிய குசும்பன் அல்ல. சில சமயம் அதிரடி; பல சமயம் ஊமைக்குசும்பு; அவ்வப்போது நக்கல், ஊசி குத்தல் நகைச்சுவை. அவரே பொறிப்புரை தந்தால் மட்டுமே புரியக்கூடிய பதிவும் உண்டு. இன்றும் ஏங்குவது: வண்ண வண்ணமாக வார்த்தைகளுக்குள் பூசியிருக்கும் வடிவு.

5. குழலி: பாட்டாளி மக்கள் கட்சியும் அன்புமணியும் இராமாதாசும் இணையத்திற்கு கொள்கை பரப்பு செயலாளர் நியமித்து விட்டார்கள் என்றே எண்ண வைத்தவர். இவர் வரும்வரை கடுமையான விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்ட பா.ம.க., குழலிக்குப் பின் நட்சத்திர அந்தஸ்து பெற்றது.

6. லக்கிலுக்: முந்தையவர் பா.ம.க. குறித்த எதிர்மறை எண்ணங்களை வாதத்தில் எதிர்கொண்டார் என்றால், இவர் திமுக, கலைஞர் குறித்த நேர்மறை இடுகைகளை முன்னிறுத்தினார். நாளடைவில் சகலகலா வல்லவனாலும் துவக்க மீட்டிங் கவரேஜும் நியாயப்படுத்தல்களும் ப்ராண்ட் நேமை நிலைநாட்டியது.

7. இலவசகொத்தனார்: முன்னவரைப் போலவே ஆரம்பத்திலேயே பலநாள் பதிவுகள் இட்ட மெச்சூரிட்டியும் சுவாரசியமான இடுகையின் சூட்சுமமும் அறிந்தவராய் வந்தார். தமிழ்மணத்தின் மறுமொழிப் பெட்டியைஹைஜாக் செய்தவர். இவரின் பின்னூட்ட எண்ணிக்கை கின்ன்ஸ், லிம்கா சாதனை.

8. சர்வேசன்: வெறும் கருத்துக்கணிப்பு என்று ஆரம்பித்தாலும் கருத்துகளை அவ்வப்போது பதிவாக இடுபவர். கதைப் போட்டி, புகைப்பட போட்டி, பதிவர் போட்டி என்று தொடர்ச்சியாக பல நல்ல மாற்றங்களை உருவாக்கியவர். இன்னும் முகமிலியாக உலா வருவது குறிப்பிடத்தக்க அதிசயம்.

9. தருமி: இயல்பாய் எதார்த்தமாய் உள்ளே வந்து தக்க சமயத்தில் வெளிப்படுத்தி முகமிலி இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாய் வைத்துக் கொள்ளலாம்.

10. ஞானபீடம்: அவ்வப்போது வருவார்; கொஞ்ச நாள் கழித்து நெடு விடுமுறை எடுப்பார். தமிழ்மணம் சார்ந்த அரசியல்நெடிப்பதிவுகள் பாட்டு, குத்துடன் நிறைய இருக்கும்.

11. அப்பிடிப்போடு: அரசியல் கிடைக்கும். அதிகம் படித்ததில்லை. தற்போது காணவில்லை.

12. யோசிங்க: எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் ஒன்று. To the point. அம்புட்டுதான். வினாவாக இருக்கட்டும்/சிந்தனையாக தோன்றட்டும்… ஷார்ட்டா முடிப்பார்.

13. இட்லி – வடை: இவ்வளவு காலமாகத் தாக்குப்பிடிப்பது மலைக்க வைக்கும் ரகசியம். இவரா, அவரா, மரத்தடியில் இருக்கிறாரா, சென்னையா, வயதானாவரா, நுட்பம் அறிந்தவரா, இலக்கியவாதியா, இருவரா என்றெல்லாம் தெளிவாகக் குழப்புபவர்.

14. ரோசாவசந்த்: சொந்தப் பதிவில் எழுதுவதில்லை. என்ன பெயரில் எங்கிருக்கிறாரோ!

15. அனாதை ஆனந்தன்: ரோசா என்றவுடன் ஏனோ நினைவுக்கு வருபவர். இன்றும் அவ்வப்போது தெளிவாக, முக்கியமான கருத்துகளுடன் மாற்று சிந்தனை என்றால் எப்படி/என்ன/ஏன் என்று உணர்த்துபவர்.

16. பொறுக்கி: அனாதை போலவே வித்தியாசமான விஷயங்களை நேரடி மொழியில் பதிபவர். அனுபவத்தையும் வாசிப்பையும் அவசரமில்லாமல் நேர்மையாகப் பகிர்வதில் தனித்து தெரிபவர்.

17. விசிதா: வாடிக்கை மறந்ததும் ஏனோ? இந்த மாதிரி பதிவர்கள் அமுத விருந்தை நிறுத்தியதும் ஏனோ?

18. டிஜே தமிழன்: பதிவுகள் மையத்தில் முதலில் படித்தது. இன்றளவும் சுடும் விவாதப் பொருளையும் இலக்கியத்தையும் தவறவிடக்கூடாத முறையில் கொடுக்கிறார்.

19. நேசகுமார்: முதன்முதலாக கொலை மிரட்டல் பெற்றவர்.

20. வவ்வால்: நவீன திருவிளையாடலில் சுவாரசியம் குறையாமல் இருக்க வைப்பவர். ‘இவர் யார்?’ என்பது புரிந்து கொள்ள முடியாத ரகசியம்.

இன்னும் நிறைய பேர் இருப்பார்கள்… விடாது கருப்பு, இரவுக்கழுகு, பெடியன்’கள், இளவஞ்சி, பச்சோந்தி – வண்ணக்குழப்பம், கல்வெட்டு, கொழுவி, ஈழநாதன், ஜொள்ளுப்பாண்டி, சனியன்…

இன்றைக்கு சட்டென்று தோன்றியவர்கள் இவர்கள் மட்டும்தான்

சாகரனும் கூடத்தான்.

பகுப்புகள்: Blogs · Lists · Masks
குறிச்சொற்கள்: , , , , , , , , ,

15 பதில்கள் இது வரை ↓

  • லக்கிலுக் // மார்ச் 27, 2008 இல் 12:34 பிற்பகல் | பதில்

    சுவாரஸ்யமான அலசல் :)

  • kundavai // மார்ச் 28, 2008 இல் 11:26 மு.பகல் | பதில்

    //3. முகமூடி: பேசாப்பொருளை விவாத களத்தில் வைத்தவர். //

    :) )))))))))))))))))))))

  • iamnotgod // மார்ச் 28, 2008 இல் 12:47 பிற்பகல் | பதில்

    சில பதிவுகள் இருந்தன என்பதை தெரிந்து கொண்டேன்.
    அந்தப் பதிவர்களே அதை மறந்திருக்கலாம்.

  • bsubra // மார்ச் 28, 2008 இல் 1:11 பிற்பகல் | பதில்

    குந்தவை…

    பூடகமா சிரிக்கறீங்க? கொஞ்சம் விளக்கமா சொன்னால் நானும் சேர்ந்துப்பேன் இல்லியா

  • bsubra // மார்ச் 28, 2008 இல் 1:12 பிற்பகல் | பதில்

    (அசல்) ‘ஆப்பு’ பதிவை விட்டுவிட்டேன் என்று தனிமடலில் நண்பர் கோபித்துக் கொண்டார்

  • உண்மைத்தமிழன் // மார்ச் 29, 2008 இல் 6:07 மு.பகல் | பதில்

    பாபா..

    இஒரு வித்தியாசமான பார்வையை பதிந்துள்ளீர்கள்.

    நானும் முயற்சி செய்கிறேன்.

    நீங்கள் கடைசியாக எழுதியுள்ள நபர் யார் என்பது தெரிய ஆவலாக உள்ளேன். உங்களுக்காச்சும் தெரியுமா?

  • bsubra // மார்ச் 31, 2008 இல் 9:25 மு.பகல் | பதில்

    —நீங்கள் கடைசியாக எழுதியுள்ள நபர் யார் என்பது தெரிய ஆவலாக உள்ளேன். உங்களுக்காச்சும் தெரியுமா?—

    உங்களுக்குத் தெரியாதா… அவரின் பெயர் வவ்வால் :D

  • ஈழநாதன் // மார்ச் 31, 2008 இல் 8:12 பிற்பகல் | பதில்

    ஈழநாதன் முகமூடிப் பெயர் என்று எனக்கே இன்றுதான் தெரியும்

  • bsubra // மார்ச் 31, 2008 இல் 9:16 பிற்பகல் | பதில்

    சந்திக்காத வரைக்கும் (புகைப்படத்திலாவது ;) முகமூடி என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறேன் ஈழநாதன் :) (மன்னிக்க… தட்டச்சு ஸ்லிப்பில் தங்களையும் சேர்த்துவிட்டேன் :D

  • விசிதா // மே 21, 2008 இல் 9:07 மு.பகல் | பதில்

    Publish at your own risk :)

    கூகுளில் சும்மா என் பேரைத் தேடி இங்கே வந்தேன். அடக் கடவுளே
    இன்னுமா என்னை(யெல்லாம்)
    நினைவு வைத்திருக்கிறார்கள்?.
    அல்சைமர் மருந்திற்கான தீவிர ஆராய்ச்சியில் இருப்பதால்
    பதிவு எழுத மறந்து போகிறது :) .
    அல்சைமர் வரும் வயதில் பதிவு எழுதினால் உங்களை உதவிக்கு அழைக்கிறேன் :) . நீங்கள் இன்னும்
    அச்சு ஊடகத்திற்கு தாவவில்லையா?.

  • bsubra // மே 21, 2008 இல் 12:25 பிற்பகல் | பதில்

    தீவிர ஆராய்ச்சியில் இருந்தால் அல்சைமர் வரும் வயது தள்ளிப் போகும் என்பது சமீபத்திய ஆராய்ச்சி முடிவு ;)

    —அச்சு ஊடகத்திற்கு தாவவில்லையா?.—

    பத்திரிகை ஆரம்பிக்க வீட்டு அம்மிணி ஒத்துக்க மாட்டேங்கறங்க :D

  • ravi srinivas // மே 22, 2008 இல் 1:50 பிற்பகல் | பதில்

    பாபா, உங்களுக்குமா பத்திரிகை ஆரம்பிக்கும் ஆசை ?. இப்போதுதான் பத்திரிகைகள் பல வருகின்றனவே. அவற்றில் எழுத வேண்டியதுதானே. ஒபாமாவுடன் ஒட்ஸ், காண்டலிசாவுடன் காப்பி,
    என்று தலைப்பு தந்துவிடலாம் :) .
    பத்திரிகை ஆரம்பித்தால் எழுத்தாளர்களின்
    பாராட்டு,வசவு இரண்டும்
    இலவசமாகக் கிடைக்கும் :) .
    கீதையெல்லாம் படிக்காமலே
    மனது எல்லாவற்றையும்
    சமமாக கருதும் நிலையை
    அடையும் :)

  • bsubra // மே 22, 2008 இல் 8:25 பிற்பகல் | பதில்

    அவற்றில் எழுத வேண்டியதுதானே.—

    அவற்றில் எழுத புரவலராக இருக்கவேண்டும் அல்லது எடிட்டருக்கு உங்களைத் தெரிந்திருக்க வேண்டும் :)

    —கீதையெல்லாம் படிக்காமலே
    மனது எல்லாவற்றையும்
    சமமாக —

    தண்ணியடிக்காமலே கிக்கா… கேக்க நல்லாத்தான் இருக்கு :D

  • ravi srinivas // மே 23, 2008 இல் 9:34 மு.பகல் | பதில்

    ”தண்ணியடிக்காமலே கிக்கா… கேக்க நல்லாத்தான் இருக்கு ”
    சிலருக்கு
    நமீதா படத்தைப் பார்த்தால் கிக்
    சிலருக்கு நமீதா பேரை கேட்டால் கிக்
    சிலருக்கு நமீதாவை நினைத்தாலே கிக்
    என்று இருப்பதில்லையா. அது போல்
    நீங்கள் எந்த லெவலில் இருக்கிறீர்களோ அதையொட்டி
    கிக் கிடைக்கும்/அமையும்.
    இதை நான் பி.ந.கீதையில்
    அத்தியாயம் 12 SMS 18 ல்
    சொல்லியிருக்கிறேனே

  • Top Tamil Bloggers in 2008 « Snap Judgment // டிசம்பர் 31, 2008 இல் 9:31 பிற்பகல் | பதில்

    [...] 2. தமிழ்ப்பதிவுகள் – குறிப்பிடத்தக்க மு… [...]

கருத்துத் தெரிவிக்கவும்