மசாலா பத்து
- போக்கிரி - தூள். மகேஷ் பாபு மலை என்றாலும், மடுவாகாத விஜய்.
- அழகிய தமிழ்மகன் – ரஜினிக்குப் பிறகு மசாலை ஊச வைக்காத நம்பிக்கை நட்சத்திரம் விஜய் முதல் முறையாக இரு வேடத்தில் தோன்றினார்.
- தாமிரபரணி - கடகட காட்சி நகர்த்தல். நேர்த்தியான விஷால். சன் டிவி சீரியலின் சாமுத்ரிகா நாயகி. சந்திரமுகி அல்லாத பிரபு.
- கண்ணாமூச்சி ஏனடா - பெண்களுக்கு பிடித்த மாதிரி படம் எடுக்க இன்னும் முன்வருகிறார்களே! பார்க்கலாம்… பாராட்டலாம்.
- பருத்திவீரன் - ஜாலியான கதையில் கடைசி அரை மணி ரணகளம்.
- நான் அவனில்லை - ஸ்னேகா திருஷ்டிப் பொட்டாக இருந்தாலும் ஜீவன் பிழைக்கவைக்கிறார்.
- அம்முவாகிய நான் - பார்த்திபனுக்கு என்றும் பாயசம், செக்ஸ் அன்றும் விற்றது; இன்றும் சதை சக்கை போடுகிறது.
- கிரீடம் - இளைய தளபதிக்கு மட்டும்தானா ரீமேக்?
- பில்லா - மீண்டும் வறட்சி; இன்னொரு ரீமேக்.
- பச்சைக்கிளி முத்துச்சரம் - மொழிமாற்றம் என்ற முறையில் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
வித்தியாச பத்து
- உன்னாலே உன்னாலே - வசனத்தில் பன்ச்; துள்ளலில் தங்கச்சி கஜோலுக்கு அக்கா; ‘ஜெய’த்திற்கு பின் மீண்டும் சதா நடிப்பு.
- எவனோ ஒருவன் – சாது மிரண்டால்; கல்கி புருஷன்.
- ஒன்பது ரூபாய் நோட்டு - சிவாஜி கணேசனுக்கு போட்டியாக நடிப்பும் சோகமும்.
- ஓரம்போ - சென்னை ஆட்டோக்களும் ஆட்டோ சார்ந்த பிரதேசங்களும்.
- கற்றது தமிழ் - ஆசைப்படுவதை படிப்பதை விட ஆசைப்பட்டது கிடைக்குமாறு படிக்க சொன்ன படம்
- கல்லூரி - விஸ்வாமித்திரர் வாயால் பிரும்மரிஷி பட்டம்
- லீ - படம் நல்லா இருக்காமே?
- சென்னை 600028 – படம் நன்றாக இருக்கிறது
- சத்தம் போடாதே - வசந்த்
- பொல்லாதவன் - பார்க்கவேண்டும்
விட்டுப்போனவை
- சிருங்காரம் - விருது வாங்கிக் கொண்டது
- தூவானம் - மோசர் பேயரில் கிடைக்கிறதா?
- பள்ளிக்கூடம் - பேசவைத்தது
- பெரியார் - நாட்டுக்கொரு தலைவன்
- மொழி - #1
- சிவாஜி -
பயமுறுத்தியவை
- மிருகம் - சலனம் செய்யவேண்டுமென்றால் ஆவணப்படமாவது எடுக்கத் தெரிந்திருக்கவேண்டும்
- வீராசாமி - உடலுக்கும் உருவத்துக்கும் ஏற்ற பாத்திரம் எடுக்கத் தெரியவேண்டும்
- ஆழ்வார் - இயக்குநரை தேர்தெடுக்கத் தெரியவேண்டும்
- குற்றப்பத்திரிகை - தணிக்கை அரசியல் தெரிந்திருக்கவேண்டும்
- தீ நகர் - கரண் பொருத்தமாக செய்கிறாரே என்னும்போது கொம்புசீவுபவர்களை அடக்கத் தெரியவேண்டும்
- தீபாவளி - ஜெயம் ரவிக்கு தெரிந்ததெல்லாம் மறுசுழற்சி; எதற்கு சொந்த முயற்சி?
- மாயக்கண்ணாடி - சேரன், எஸ்,ஜே. சூர்யாவுக்கு எல்லாம் இயக்குநர் சரக்கு தீர்ந்தாச்சா?
உதவிய பதிவுகள்:
சண்டே சினிமா :: ஃப்ளாஷ் பேக் 2007 – மனோஜ்கிருஷ்ணா
Tamil Cinema 2007 – Top Films, Movies, Flashback, Stars: Dinamalar











6 பதில்கள் இது வரை ↓
Prakash // ஜனவரி 3, 2008 இல் 1:23 பிற்பகல் |
//தீபாவளி – ஜெயம் ரவிக்கு தெரிந்ததெல்லாம் மறுசுழற்சி; எதற்கு சொந்த முயற்சி//
நெத்தியடின்னேன்…
bsubra // ஜனவரி 4, 2008 இல் 4:54 மு.பகல் |
பிரகாஷ் நன்றி
shakthi // ஜனவரி 5, 2008 இல் 6:44 பிற்பகல் |
all the list are really worth but i like periyar
bsubra // ஜனவரி 17, 2008 இல் 3:30 மு.பகல் |
Thanks Shakthi
bsubra // ஏப்ரல் 8, 2008 இல் 3:02 பிற்பகல் |
பத்திரிகையாளர் சங்க திரைப்பட விருதுகள்
சிறந்த நடிகர் – சத்யராஜ் (பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு)
சிறந்த நடிகை – ப்ரியா மணி (பருத்தி வீரன்)
சிறந்த கதாசிரியர் – ராம் (கற்றது தமிழ்)
சிறந்த திரைக்கதாசிரியர் – வெங்கட் பிரபு (சென்னை-600028)
சிறந்த படம் – பருத்திவீரன்
சிறந்த வசனகர்த்தா – விஜி (வெள்ளித்திரை)
சிறந்த இசையமைப்பாளர் – யுவன் சங்கர் ராஜா ( பல படங்கள்)
சிறந்த பாடலாசிரியர் – நா. முத்துக்குமார் (பல படங்கள்)
What were the notable & forgettable Tamil Movies in 2008: Thamil Cinema « Snap Judgment // டிசம்பர் 25, 2008 இல் 5:18 மு.பகல் |
[...] டிசம்பர் 25, 2008 · மறுமொழிகள் ஏதும் இல்லை சென்ற வருட நினைவுகூர்தல்: Tamil Film Songs – Best of 2007 Movie Music | 2007 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள் [...]